உள்ளூர் செய்திகள்

அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் நடவடிக்கை

Published On 2023-02-28 10:07 GMT   |   Update On 2023-02-28 10:07 GMT
  • வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவாமிமலை:

கும்பகோணம் உட்கோட்ட போலீசார் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

சிலர் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்து சேதமானது. இதற்கு வாகனத்தில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்றதே காரணம் ஆகும்.

எனவே, இது போன்று அதிக பாரம் மற்றும் உயரத்தில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News