அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை
- கும்பகோணம் பகுதியில் வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின
தஞ்சாவூர்:
கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தற்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் விவசாய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விதிகளை மீறி லாரி, டிராக்டர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், அதிக உயரமாகவும் வைக்கோல் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி செல்வதாக புகார்கள் வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் பகுதியில் அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றிச்சென்ற லாரி ஒன்றும், சரக்கு வேனும் மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.
இதில் 2 வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின. கடும் நடவடிக்கை இவ்வாறு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததற்கு அதிக உயரத்தில் வைக்கோலை ஏற்றி சென்றதே காரணம்.
எனவே இது போன்று அதிக பாரம் மற்றும் அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால் வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாககடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.