தூத்துக்குடி நெய்தல் பூங்கா பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை - பொதுமக்களிடம் மேயர் உறுதி
- லயன்ஸ் டவுன் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
- அப்போது அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்தல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் வேண்டும் என்று மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பக்கிள்புரம், பிரையன்ட் நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பிரையன்ட் நகர் பகுதியில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்றதால் அப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் என அதிகாரிகள் மேயரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து லயன்ஸ் டவுன் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்தல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வரும் நாட்களில் அதனை நிறைவேற்றி தருவதாக பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பின ருமான சுரேஷ் குமார் ராம கிருஷ்ணன், கவுன்சிலர் ரெக்ஸ்லின், முன்னாள் கவுன்சிலர் பாலன், ராஜா,தி.மு.க. நிர்வாகிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.