விருப்பாச்சி தலையூற்று அருவியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை
- ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவி உள்ளது
- இதனை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி ஊரா ட்சியில் நங்காஞ்சியாற்றின் மறுகரையில் ஆதிதிரா விடர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மழைக்காலத்தில் நங்காஞ்சி யாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அமைச்சர் அர.சக்கரபாணியிடம் அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து நபார்டு வங்கி உதவியுடன் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2.23 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணி த்துறை அனுமதி வழங்கியது. அதன் பேரில் ஞாயிற்று க்கிழமை விருப்பாச்சி நங்காஞ்சியாற்றின் கரையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
விருப்பாச்சி பாரம்பரிய கிராமமாகும். இக்கிராமம் ஒட்டன்சத்திரத்துக்கு இணையாக வளர்ச்சி அடையப் போகிறது. இங்கு அரசு தொழிற்பயிற்சிக் கூடம் போக்குவரத்து பணி மனை ஆகியவை அமைக்க ப்படும். அதேபோல் தலையூற்று அருவி சுற்றுலா தலமாக்கப்படும்.
பரப்பலாறு அணை தூர்வார அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. 10 தினங்களுக்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று அணை தூர்வாரப்பட உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து பெருமாள் குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை அவர் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொது ப்பணித்துறை செயற்பொறி யாளர் கோபி, உதவி பொறி யாளர் கோகுலகண்ணன், உதவி பொறியாளர் நீதிபதி, மாவட்டக் கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, ஒன்றியக் கவுன்சிலர் சின்னத்தாய் தங்கவேல், தி.மு.க. ஒன்றியச் செய லாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், விருப்பாச்சி ஊராட்சித் தலைவர் மாலதி சந்திரன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.