தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கைஅமைச்சர் கீதாஜீவன் உத்தரவு
- தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
- மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி யுள்ளது.
இந்நிலையில் 15, 16, மற்றும் 18-வது வார்க்குட்பட்ட பி அண் டி காலனி, 5 மற்றும் 13 ஆகிய தெருக்கள், புஷ்பாநகர், கதிர்வேல்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை பம்பிங் மூலமாக வெளியேற்றவும், சில இடங்களில் வடிகால்களில் இணைக்கவும் ஜே.சி.பி. மூலம் பணிகளை செய்திட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.
மேற்கு பகுதி மண்டல உதவி ஆணையர் சேகர், மாநகர தி.மு.க. செய லாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான் என்ற சீனிவாசன், வட்ட செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்பெரு மாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.