உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதியிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

நாகையில், பீச் வாலிபால் அகாடமி அமைக்க நடவடிக்கை; அமைச்சர் உறுதி

Published On 2022-12-18 09:39 GMT   |   Update On 2022-12-18 09:39 GMT
  • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
  • ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

நாகப்பட்டினம்:

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.

ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.

இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News