திருமருகலில் தனி சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை- எம்.எல்.ஏ. உறுதி
- திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோபுரஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒன்றியத்தில் செயல்படுத்த ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் கோபுரஜபுரம் ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம்,சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்.
54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலில் தனி சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.
திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.