உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை

Published On 2022-10-12 08:12 GMT   |   Update On 2022-10-12 08:12 GMT
  • வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
  • அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும்.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது. விருத்தாச்சலம் அருள்ஜோதி என்பவர் வீட்டில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்காக ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், மேல் ஆதனூர் பகுதி சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மளிகை கடையில் நாட்டு வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததையும், அம்பாள் புரம் கிராமத்தில் கொளஞ்சி கண்ணன் என்பவர் வீட்டில் 35 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை ஆன்லைன் மூலமாக வாங்கி இருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஆகையால் கடலூர் மாவட்டத்தில் அரசு உரிமைப் பெறாமல் சட்டவி ரோதமாக பட்டாசுகள் பதுக்கி விற்பனை செய்தாலோ, அரசு உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்பவர்கள் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தாலோ அரசு வழிமுறைகளின் படி பாதுகாப்பு முன்னெ ச்சரிக்கை நடவடி க்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு அரசு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அரசு விதிமுறைகளின்படி முழு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News