வருகிற ஜூன் 17-ந்தேதி முதல் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக குளிர்சாதன பெட்டி இணைப்பு
- தென்னக ரெயில்வேயின் கீழ் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலானது தினமும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்படுகிறது.
- இதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலானது நெல்லை-சென்னை-நெல்லை இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
தென்னக ெரயில்வேயின் கீழ் இயங்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலானது தினமும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரையிலும், மறு மார்க்கமாக செங்கோ ட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரையிலும் இயக்கப்படுகிறது.
ஏ.சி. பெட்டிகள் இணைப்பு
இதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலானது நெல்லை-சென்னை-நெல்லை இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 ெரயில்களிலும் வருகிற ஜூன் மாதம் 17-ந்தேதி முதல் ஏசி பெட்டிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதாவது முதல் மற்றும் 2-ம் வகுப்புடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் இந்த 2 ரெயில்களிலும் இணைக்கப்படுகிறது. இதன் காரணமாக தூங்கம் வசதி பெட்டியில் ஒன்று குறைக்கப்படும் என ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-
தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ெரயில்களும் பெட்டிகள் பகிர்வு முறையில் தூத்துக்குடி பராமரிப்பு பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் பெட்டிகள் பகிர்வு முறையில் நெல்லையில் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் முத்து நகர், கன்னியாகுமரி ெரயில்களில் இருந்து முதல்வகுப்புடன் கூடிய 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று நீக்கப்பட்டு நெல்லை மற்றும் பொதிகை ெரயில்களுக்கு கொடு க்கப்பட இருக்கின்றன. முத்துநகர் மற்றும் கன்னி யாகுமரி ெரயில் களுக்கு முழுமையான முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி வழங்கப்பட இருக்கிறது.
8 தூங்கும் வசதி பெட்டிகள்
இதில் வருத்தமான செய்தி, தற்போது 9 தூங்கும் வசதி பெட்டிகளுடன் இயங்கி வந்த நெல்லை மற்றும் பொதிகை ெரயில்களில் இருந்து ஒரு பெட்டி நீக்கப்பட்டு இந்த முதல்வகுப்புடன் கூடிய 2 அடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.
இனிமேல் பொதிகை மற்றும் நெல்லை ெரயில்களில் 8 பெட்டிகள் தான் குளிர்சாதன வசதி இல்லாத தூங்கும் வசதி பெட்டிகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.