புதுச்சேரி

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத்துங்கன்  ஆய்வு மேற்கொண்ட காட்சி.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையத்தை ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-08-20 08:02 GMT   |   Update On 2023-08-20 08:03 GMT
  • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
  • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி:

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News