மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க தச்சநல்லூரில் கூடுதலாக ஒரு சிறப்பு மையம் திறப்பு
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்காக ஏற்கனவே தச்சநல்லூர் பிரிவு அலுவலகத்தில் சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது தச்சநல்லூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் மின் இணைப்பு எண்னணுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை இன்று காலை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நெல்லை நகர் புறக்கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி தலைமை தாங்கினார். பழைய பேட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
மேலும் உதவி மின் பொறியாளர்கள் சரவணகுமார், சரவணன், அருணன், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்கனவே நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் 103 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தியாகராஜநகரில் நெல்லை மத்திய அலுவலகத்திலும், தற்பொழுது தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை புரிந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.