உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ மூலம் மானியம்

Published On 2022-09-13 09:26 GMT   |   Update On 2022-09-13 09:26 GMT
  • தாட்கோ மூலம் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.
  • வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 500-ல் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும் 50 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.2.25 கோடி, வங்கி கடன் ரூ.4.87 கோடி என முடிவு செய்யப்பட்டு, கறவை மாடு வாங்க ஒதுக்கீடு அரசாணை வரப்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திற்கு 18 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.8.10 லட்சம் ஆகவும், பழங்குடியினர் 3 பேருக்கு தலா 45,000 வீதம் ரூ.1.35 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும், தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது, இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத் தொகை ரூ.1.50 லட்சத்தில் 30 சதவீத மான்யம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பயனாளிகள் http://application.tahdco.com, http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் மற்றும் பழங்குடியினர் http://fast.tahdco.com, http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News