திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி
- ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது.
- ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை தேசிய மாணவர் படை மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் தூய்மை பணி நடந்தது. திருச்செந்தூர் ரெயில் நிலைய தலைமை அதிகாரி சத்யஜித், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர். ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை தேசிய மாணவர் படை மாணவர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
இதில் ஆதித்தனார் கல்லூரி, ஆறுமுகநேரிகா.ஆ. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி, உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றனர். ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினர். ஏற்பாடுகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டினன்ட் சிவமுருகன், சப்-லெப்டினன்ட் சிவ இளங்கோ, ஷேக் பீர் முகம்மது காமில், ஐசக், கிருபாகரன், சூர்யபொன்முத்து சேகரன், ரெயில்வே போலீஸ்காரர் அலெக்சாண்டர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் செய்து இருந்தனர்.