உள்ளூர் செய்திகள்

கோவில் நிலம் குத்தகைக்கு ஏலம் விடுவது தொடர்பாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியிரை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே கோவில் நில குத்தகைக்கான ஏலம் தள்ளிவைப்பு

Published On 2023-07-28 09:50 GMT   |   Update On 2023-07-28 09:50 GMT
  • திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
  • கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெரங்கியம் கிராமத்தில் ஜோதீஸ்வரர், மாரியம்மன், அய்யனார், விநாயகர், கம்ப பெருமாள் உள்ளிட்ட கோவில்களுக்குச் சொந்தமாக சுமார் 32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் சொத்துக்களில் உரிமை கோரி பெரங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இதன் காரணமாக கோவில் சொத்துக்கள் முறையான பராமரிப்பின்றி இருந்தது. திருவேங்கடம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்ததால், அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.

இதையடுத்து 2019-ம் வருடம் முதல் கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதனடிப்படையில் கோவில் சொத்துக்களை குத்தகை ஏலம் விடுவதற்காக, நேற்று அறநிலையத்துறை அதிகாரிகளான கோவில் தக்கார் சிவப்பிரகாசம், கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் வந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டசெயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பிச்சப்பிள்ளை, செல்வம் உள்ளிட்டோர், ஜோதீஸ்வரர் கோவில் இருக்கும் இடமே தெரியவில்லை. கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்த பின்பு தான், கோவில் சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அதிகாரி களுக்கும், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் சொத்துக்களை ஏலம் விடுவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News