உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரியில்: மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

Published On 2022-07-05 09:53 GMT   |   Update On 2022-07-05 09:53 GMT
  • விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசு செராமிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக செராமிக் கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் திருமுருகனிடம் முதலாமாண்டு சேர்க்கை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது கல்லூரி முதல்வர் இந்த கல்லூரி முன்னர் வணிகவரித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டதாகவும், இந்தாண்டு முதல் உயர்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் மாறிவிட்டதாக தெரிவித்தார், அதனால்தான் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக சேர்க்கை தொடங்கப்படும் என தெரிவித்தார். இதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக தொழில்துறை கூடுதல் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது சேர்க்கையை உடனடியாக தொடங்குவதாக எம்.எல்.ஏ விடம் உறுதி அளித்த கூடுதல் இயக்குனர், மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்குமாறு கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விருத்தாசலம் செராமிக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சேர்க்கை தொடங்கியது.

Tags:    

Similar News