- திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.
- விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும்
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்த குறிப்பில் கூறியிப்பதாவது:-
திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்போது பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை முழுவதுமாக இணைய தளம் வழியில் மட்டுமே நடைபெற உள்ளது.
தகுதியுள்ள மாணவர்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்குஉரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் மற்றும் தமிழ், பி காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பி பி ஏ ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாள்.
மேற்கொண்டு விவரங்க ளுக்கு பூதலூரில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விவரம் பெற்று க்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.