தூத்துக்குடியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைக்கும் பணி-எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு
- பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது.
- 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை, எஸ்.பி. சண்முக நாதன் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி:
2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமை க்கும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அதனை விரைந்து முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதியில் இளை ஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் அ.தி.மு.க. பூத் கமி ட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோ சனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது. மத்திய வடக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் ஜெய் கணேஷ் தலைமை தாங்கினார்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி. சண்முக நாதன் கலந்து கொண்டு 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்தும், பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் பெருமாள், மாவட்ட பிற அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், பிரபாகர், பகுதி செய லாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், பகுதி துணை செயலாளர் செண்பக செல்வன், வட்ட செய லாளர்கள் திருச்சிற்ற ம்பலம், நவ்சாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், உதயசூரியன், ரகுநாதன், ராஜன், அந்தோணிராஜ், ரெங்கன், பொன்சிங், வக்கீல் முனிய சாமி, சரவண பெருமாள், சிவசங்கர், சரவணன், ரமேஷ், செண்பகராஜ், ராஜ்குமார், தலைமை நிலைய பேச்சாளர் முருகானந்தம், டைகர் சிவா, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, மெஜூலா, பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, நிலா சந்திரன், கொம்பையா மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாயராஜா, ராஜா, ஆனந்த், ரியாஸ், மைதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.