ஒட்டன்சத்திரம் அருகே டிரைவர் கொலை வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி கைது
- டிரைவர் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
- கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர் வடிவேல் என்பவர் இரவோடு இரவாக மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அதில்சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் தனது நண்பர்களுடன் சுரேஷ்குமாரை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.
வடிவேல் ஓடைப்பட்டி வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தேடி வந்தனர்.
ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமை யிலான தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோயம்பே ட்டில் பதுங்கி இருந்த நட ராஜனை கைது செய்தனர்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.