உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

திருவாரூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

Published On 2022-09-21 08:21 GMT   |   Update On 2022-09-21 08:21 GMT
  • தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க தலைவராக இருக்க முடியும்.
  • சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள்.

திருவாரூர்:

திருவாரூர் காந்தி சாலையில் அறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வைத்தார்.

மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலியபெருமாள், ரயில் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பெரியார் சிலைக்கு சென்னையில் மாலை அணிவித்து விட்டு ஓ.பி.எஸ் வரும்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது அரசு தன் கடமையை செய்கிறது என்று கூறுகிறார்.

இதை அவர் கூறலாமா?.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு இருக்கிறார்.

அதேபோன்று நிர்வாகிகள் நாங்களும் எங்கள் கடமையை செய்திருக்கிறோம். சரியான தலைவரை அ.தி.மு.க.விற்கு தலைமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

காலை உணவு திட்டத்தை எடப்பாடியார் தனது ஆட்சி முடியும் தருவாயில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

ஆட்சிக்கு வந்திருந்தால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

இப்போது ஸ்டாலின் ஐரோப்பாவை பார்த்து ஆஸ்திரேலியாவை பார்த்து நான் ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

பசியை போக்குவது தான் எனது வாழ்வின் லட்சியம் என்கிறார்.

உண்மையில் பசியை போக்கியது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள் இவர்கள் தான்.

அதில் அவர் பங்கு போட்டுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் ஆசைமணி, தலைமைக் பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

முடிவில் ஒன்றியச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News