உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க கூட்டத்தில் பாரதிய ஜனதாகட்சி தேசிய உறுப்பினர் கல்யாணராமன் பேசினார்.

பண்ருட்டியில் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை

Published On 2022-06-25 10:27 GMT   |   Update On 2022-06-25 10:27 GMT
  • பண்ருட்டியில் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.
  • ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

கடலூர்:

பாரதீய ஜனதா கட்சி தேசிய உறுப்பினர் கல்யாணராமன் முந்திரி தொழில் வளர்ச்சி குறித்து ஆராய பண்ருட்டி வந்தார்.

பண்ருட்டி, காட்டாண்டி க்குப்பம், கீழக்குப்பம் பகுதியிலுள்ள முந்திரி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு முந்திரி கொட்டை உடைக்கும்பணிகளை பார்வையிட்டார்.

பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு வருகை தந்த இவரை, பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்நிறுவனத்தின் அதிபர்கள் மாயகிருஷ்ணன், தமிழ்நாடுமுந்திரிஉற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கசெயலாளர் ராம கிருஷ்ணன், தேவநாதன், பாலகிருஷ்ணன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்மலர்வாசகம், செயலாளர் ராமகிரு ஷ்ணன், பொருளாளர் செல்வமணி, ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு முந்திரிதொழிலுக்கு தேவையான வசதிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள்குறித்தும்கேட்டறிந்தார்.

இரண்டு நாள் பயணத்தின் மூலம் தான்அறிந்து கொண்டவிவரங்களை அறிக்கையாக தயார் செய்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சினை களைத் தீர்க்க உதவ உதவுவதாக கல்யாணராமன் உறுதி யளித்தார்.

Tags:    

Similar News