உள்ளூர் செய்திகள்

மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த போது எடுத்தபடம்.

12-ம் வகுப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் சிக்கினார்

Published On 2022-12-06 08:32 GMT   |   Update On 2022-12-06 08:32 GMT
  • இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை பொறுப்பு தலைமை மருத்துவ அலுவலர் அன்பரசு, ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மெடிக்கல் ஒன்றின் அருகே தனி அறையில் ஒன்னுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணன் (வயது50) என்பவர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு முறையான ஆங்கில மருத்துவ கல்வி பயிலாமல் பொதுமக்களை ஏமாற்றி அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ குழுவினர் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்திய தண்டனை சட்டப்படி மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர். இந்த ஆய்வின் போது அவரது அறையில் இருந்த ஏராளமான மருத்துவ பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அறையை சீல் வைத்தனர்.

Tags:    

Similar News