உள்ளூர் செய்திகள்

புதுபிக்கப்பட்ட கல்வெட்டை படத்தில் காணலாம்.


செங்கோட்டையில் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மீண்டும் காமராஜர் கல்வெட்டு

Published On 2022-12-01 09:05 GMT   |   Update On 2022-12-01 09:05 GMT
  • வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.
  • கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக முத்துசாமி பூங்காவில் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கல்வெட்டு செங்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதனை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டானது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழா முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் காமராஜர் பேத்தி காமராஜ்கமலிகா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராம் மோகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி வேலுசாமி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Tags:    

Similar News