உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பணிகள் தீவிரம்
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை , அய்யலூர், எரியோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது.
- நெற்கதிர்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை , அய்யலூர், எரியோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது.
இதனைதொடர்ந்து அழகாபுரி, கூம்பூர், மல்லபுரம், குஜிலியம்பாறை, வடமதுரை, அய்யலூர், பூத்தம்பட்டி , கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் சொர்ணவாரி எனப்படும் தை மாதம் பட்டம் அறுவடை செய்யும் வகையில் நெல் நாற்றுகள் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் குலவை சத்தத்துடன் தெம்மாங்கு பாடல் பாடி வயல்வெளியில் உற்சாகமாக நடவு பணி மேற்கொண்டனர்.
வேடசந்தூர் பகுதியில் ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64, ஐ.ஆர்.36, எனப்படும் ரகங்கள் அதிக அளவில் மகசூல் கிடைக்கும் வகையில் விளைகின்றன. இதனால் இந்த ரக நெற்கதிர்களை நடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.