உள்ளூர் செய்திகள்

பழங்குளம் ஊராட்சியில் நடந்த வேளாண் திட்டப் பணிகளை வேளாண் கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு செய்த காட்சி.


சாத்தான்குளத்தில் வேளாண் கூடுதல் இயக்குனர் ஆய்வு

Published On 2022-10-10 09:08 GMT   |   Update On 2022-10-10 09:08 GMT
  • சென்னை வேளாண் இயக்குனரக கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் தரிசுநில தொகுப்பினை ஆய்வு செய்தார்.
  • தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்

சாத்தான்குளம்:

சென்னை வேளாண் இயக்குனரக கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் சாத்தான்குளம் வட்டாரம் வேளாண்-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார்.

சாத்தான்குளம் வட்டார பழங்குளம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தரிசுநில தொகுப்பினை ஆய்வு செய்தார்.

மேலும் பனை மேம்பாட்டு இயக்ககத்தின் சார்பாக பழஙகுளம் பள்ளிக் கோவில் குளக்கரையில் பனை விதைகள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் நடவு செய்ப்பட்டதையும் ஆய்வு செய்தார் .

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முகைதீன், உழவர் பயிற்சி நிலையம் துணை இயக்குனர் ஜெபசெல்வின் இன்பராஜ் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பழங்குளம் ஊராட்சித் தலைவர் செல்லக்கனி செல்லத்தரை, சாத்தான்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுதாமதி, வட்டார வேளாண அலுவலர் சுஜாதா உதவி, வேளாண் அலுவலர்கள் சிவராம், கோபாலகிருஷ்ணன், முனீஸ்வரி, கீர்த்திகா மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News