உள்ளூர் செய்திகள்

நெல் பயரில் உள்ள இலை சுருட்டுபுழு தாக்குதலை கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை

Published On 2023-11-13 09:59 GMT   |   Update On 2023-11-13 09:59 GMT
  • பயிரில் இலைச்சுருட்டுபுழு தாக்குதல் அல்லது தட்டைப்புழு தாக்குதல் இருந்து வருகிறது.
  • மழை தூறல் இருந்து வருவதே இப்பூச்சி தாக்குதலுக்கான காரணமாகும்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம், பச்சபெரு மாநல்லூர், மகாராஜபுரம், மாதானம், வேட்டங்குடி, குன்னம், பெரம்பூர், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 25 முதல் 30 நாள் வரை வயதுள்ள சம்பா நேரடி விதைப்பு பயிரில் இலைச்சுருட்டுபுழு தாக்குதல் அல்லது தட்டைப்புழு தாக்குதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் அருகே பச்சபெருமாநல்லூர் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில் ராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள சம்பா நேரடி விதைப்பு பயரில் பரவலாக இலை சுருட்டுபுழு பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

மேகமூட்டம் மற்றும் லேசான மழை தூறல் இருந்து வருவதே இப்பூச்சி தாக்குதலுக்கான காரணமாகும். அதிக மழை பொழிவு இருந்தால் பூச்சி தாக்குதலும் அழிந்து விடும்.ஆனால் லேசான தூறல் மழை இருந்து வருவது இப் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

இதனை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது கார்ட்டாப்ஹைட்ரோகு ளோரைடு அல்லது புரப்பன்னபாஸ் பூச்சிக்கொல்லி மருந்தை ஏக்கருக்கு 400லிருந்து 500 மில்லி மீட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார். வேளாண் உதவி அலுவலர்கள் பாலச்சந்திரன், மகேஸ்வரன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News