புவனகிரி அருகே அழிச்சிகுடியில் பா.ம.க. கொடி எரிப்பு:மர்மநபர்கள் நள்ளிரவில் அட்டூழியம்
- பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
- பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது
கடலூர்
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது மர்ம நபர்கள் நேற்று இரவு, கொடிக்கம்பத்திலிருந்து பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அருகில் திரண்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் இருந்த பா.ம.க. கொடியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் புவனகிரி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதே இடத்தில் பா.ம.க. கொடி அறுத்து எரியப்பட்டது. இது தொடர்பான வழக்கும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பா.ம.க.வினரிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல புவனகிரி சித்தேரியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடி அறுத்து எரிந்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் நற்பணி மன்ற பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. கொடியை எரித்த அதே மர்ம நபர்கள் இந்த செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.