புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
- ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
ஏற்காடு:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
அப்போது, ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
மது அருந்திவிட்டு வரும் சுற்றுலா பயணிகளை விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது. கொண்டாட்டங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு விடுதி நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
நீச்சல் குளம் அமைந்திருக்கும் விடுதிகளில் நீச்சல் குளத்தினை மூடி வைத்திருக்க வேண்டும். இரவு 1 1/2 மணி நேரம் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். அந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பதோ, அதிக சத்தத்துடன் டி.ஜே மியூசிக் வைப்பதோ, இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி செல்வதோ இருக்கக் கூடாது. இது போன்ற அறிவுறுத்தல்களை விடுதி நிர்வாகம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.