உள்ளூர் செய்திகள்
விளையாட்டு போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தபோது எடுத்த படம். அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் உள்ளனர்.


அகில இந்திய கபடி போட்டி- மராட்டியம், டெல்லி அணிகள் வெற்றி

Published On 2022-08-14 09:02 GMT   |   Update On 2022-08-14 09:02 GMT
  • ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தார்.
  • போட்டிகளுக்கு இடையே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

திசையன்விளை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69- வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்தியஅளவிலான ஆண்கள், பெண்கள் அணியினர் மின்னொளி கபடி போட்டி 11-ம் தேதி தொடங்கியது.

நேற்று இரவு 3-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.

ஆண்கள் பிரிவில் மராட்டிய அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக அணியும் விளையாடியது. இதில் மராட்டிய அணி 28 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எஸ்.ஆர்.எம்.அணி 26 புள்ளிகள் பெற்றது.

மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டெல்லி சி.ஆர்.பி.எப். அணியும், குஜராத் இன்கம்டேக்ஸ் அணியும் விளையாடியது. இதில் டெல்லி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி 22 புள்ளிகள் எடுத்தது.போட்டிகள் இன்று அதிகாலை வரை நடந்தது.

பல்வேறு ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளுக்கு இடையே நடனம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ராமச்சந்திரன், வி.எஸ்.ஆர்.சுபாஷ்.நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News