தென்திருப்பேரை பேரூராட்சிக்கு குடிநீர் திட்டத்திற்கு ரூ.8.41 கோடி ஒதுக்கீடு -முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
- தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்திருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தீர்மானம்
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்தி ருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி, சீதாலட்சுமி, மாரியம்மாள், சுபா காசிலட்சுமி மற்றும் இளநிலை அலுவலர் சேக் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.