உள்ளூர் செய்திகள்
மணிமுத்தாறு அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி
- கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
- மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.
மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது.
இதனால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் டிசம்பர் 26-ந் தேதி முதல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து 6-வது நாளாக இன்று அருவியில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து நிலையில் அருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப் பதற்க்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப் பக இனை இயக்குநர் செண்பக ப்ரியா அனுமதி அளித்துள்ளார்.