உடன்குடி பள்ளியில் தரையில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
- மாணவர்கள் தரையில் இருந்து பாடம் படிப்பதால், பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.
- மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் ஹமீதா சபானா, தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஒரு கோரிக் கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு புதுமனையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-வது மற்றும் 5-வது படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் மண் தரையில் அமர்ந்து பாடம் படிக்கி றார்கள். தரையில் இருந்து பாடம் படிப்பதால், பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதை தடுப்ப தற்காக இவர்களுக்கு சிமெண்ட் தளம் அல்லது டைல்ஸ் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.