திசையன்விளை 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
- முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. 47 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பின்பு நடந்த அறிமுக விழாவிற்கு முன்னாள் மாணவர் அதிசய ஜாண் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும் கோவா தொழில் அதிபருமான பால்ராஜ், பள்ளி தாளாளர் ஜேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரும், பள்ளி முன்னாள் மாணவியுமான கலாவதி மணிமாறன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் சுவிஷேச முத்து, டாரதி சுவிஷேச முத்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் தங்கவேல், அல்வாரில், ஜேசு டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர் ஜெபதாமஸ் நன்றி கூறினார்.