உள்ளூர் செய்திகள்

உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்த காட்சி.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை திருவிழா கருட சேவை

Published On 2023-04-28 08:59 GMT   |   Update On 2023-04-28 08:59 GMT
  • சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • வருகிற 1-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், நேற்று கருடோத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். வருகிற 1-ந் தேதி (திங்கள்கிழமை) தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News