உள்ளூர் செய்திகள்

கோவை-பொள்ளாச்சி இடையே கூடுதல் ரெயில் இயக்க வேண்டும்

Published On 2023-03-14 09:52 GMT   |   Update On 2023-03-14 09:52 GMT
  • பாலக்காடு கோட்ட மேலாளரிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
  • அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் ரெயில்வே பகுதியில் அமைக் கப்பட்டுள்ள மின்ம யமாக்கல் நிறைவு பணியை பார்வை யிட்டதுடன், பயணி களுக்கு அடிப்படை வசதி எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு செய்தார்.முன்னதாக பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து வரும் போது தண்டவளாத்தின் உறுதி தன்மை, அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலசங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் நல்லசாமி மற்றும் பலர் பாலக்காடு கோட்ட மேலாளர் எஸ்.பால்சிங்தோ மரிடம் பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி வழித்த டத்தில் மீட்டர் கேஜ் இருப்பு பாதை நடைமுறையில், இருக்கும் போது அந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை 100 கி.மீட்டராக அதிகப்படுத்த வேண்டும்.

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர் கூறும்போது, பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சியில் இருந்து புதிய ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News