சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.
சேலம்:
சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.
கொரோ பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனை களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முன்தினம் வரை 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 226 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். கடந்த ஒரு ஆண்டாக உயிரிழப்பு இல்லை.
முதியவர் பலி
இந்த சூழலில் இன்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஜாகிர் ரெட்டி பட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதார துறையினர் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதியவர் வசித்து வந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அவருடன் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு முதியவர் பலியானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.