கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
- திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி விளக்கி பேசினார்.
- வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார்.
கடையம்:
கடையம் வட்டாரம் அணைந்த பெருமாள் நாடானூர் பஞ்சாயத்தில் 2023-2024-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நூலகத்தில் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன்ராணி கலந்து கொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார். கால்நடை துறை சார்பில் கலந்து கொண்ட கால்நடை ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கால்நடைதுறை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கி கூறினார். மேலும் பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை ஊரக உள்ளாட்சி துறை மூலம் பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் வேலைகள் பற்றி விளக்கினார். வேளாண்மை உதவி அலுவலர் தீபா கூட்டத்திற்கான ஏற்பாடு களை செய்திருந்தார். கடையம் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தேர்வாகி யுள்ள துப்பாக்குடி, முதலி யார்பட்டி, திருமலை யப்பபுரம் பஞ்சாயத்து களிலும் அனைத்து துறைகளின் சிறப்பு முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.