தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானம் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
- தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
- கோவில் கொடைவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 3-ம் மைல் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மாணவரணி சத்யா செந்தில்குமார், கோவில் தர்மகர்த்தா, ராமசந்திரன், தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர்கள் கனகராஜ், ஆறுமுகம், மாரியப்பராஜா, மணிகண்டன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சந்திரசேகர், துணைச்செயலாளர்கள் நாகராஜன், சந்தனராஜ், சுந்தர், மாசானமுத்து, கார்த்திஸ்துரை, முத்து, ராஜகுரு, சுப்பிரமணி, ராஜன், அர்ச்சகர்கள் இசக்கிமுத்து, லெட்சுமணன், பரமசிவன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.