உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-08-05 09:12 GMT   |   Update On 2022-08-05 09:12 GMT
  • விழிப்புணர்வு கூட்டத்திற்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார்.
  • குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமை களம் மற்றும் குழந்தை உரிமையும் நீங்களும் என்ற நிறுவனம் மூலம் குழந்தை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை முன்னிலை வகித்தார். மனித உரிமைகள், குழந்தை கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து இயக்குனர் பரதன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு தென்காசி தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இந்த அமைப்புகளை சேர்ந்த லோகமாதா, நிஷா, சுப்புலட்சுமி, மாரியம்மாள் மற்றும் பள்ளி மாணவிகள் 800 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் குழந்தை கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழந்தை உரிமை நிறுவனம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலை பள்ளிகளிலும் கிராமப்புற பெண்களிடமும் விழிப்புணர்வு நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவிகள் குழந்தை கடத்தல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் ராதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News