உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On 2022-07-08 02:00 GMT   |   Update On 2022-07-08 02:01 GMT
  • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.
  • அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திருவாரூர் :

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

2015 முதல் 2021-ம் ஆண்டு வரை அமைச்சர் பதவியில் இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News