உள்ளூர் செய்திகள்

வன்கொடுமை சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திட்டச்சேரி காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-20 09:02 GMT   |   Update On 2022-11-20 09:02 GMT
  • போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.
  • இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கினர்.

நாகப்பட்டினம்:

திட்டச்சேரி காவல் நிலையம் சாா்பில் உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக திட்டச்சேரி காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிரு ஷ்ணன் சுரேஷ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், போக்சோ சட்டம், இணையதளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாா்.

இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன், பள்ளியின் ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News