இறால் வளர்ப்பிற்கு மானியத்துடன் புதிய குளங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்
- பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.
- மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாட்டில் இறால் உற்பத்தினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்புவோர் பயன்பெறும் வகையில் உவர் நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
உவர் நீர் இறால் வளர்ப்பி ற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 1 ஹெக்டேர் பரப்பிற்கு மொத்த செலவினம் ரூ.8 லட்ச த்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.3.20 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும்.
மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.3.60 லட்சமும் வழங்கப்படும்.
மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டேர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டேர் என மொத்தம் 8 ஹெக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.
எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.