உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

சிறுகனிமங்களை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்

Published On 2023-03-15 09:12 GMT   |   Update On 2023-03-15 09:12 GMT
  • 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
  • மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News