பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- கல்லூரி வளாகத்தினுள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை.
- தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ நட்டு வைத்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழிநுட்பக் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவிகள் கல்லூரி மைதானம் மற்றும் மரத்தின் நிழல்களில் அமர்ந்து உணவருந்துவதை அறிந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் சென்னை துர்கா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையா ளருமான சண்முகம் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளேயே அமர்ந்து உணவருந்தும் விதமாக ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் உணவருந்தும் மேடை அமைத்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து உணவரு ந்தும் வளாகம் திறப்பு விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
பின்னர் பருவ தேர்வு களில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு துறையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் தங்கமணி தலைமை வகித்தார்.
இயந்திரவியல் துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன், அமைப்பியல் துறை தலைவர் முகமதுஆஷிக் அலி முன்னிலை வகித்தனர்.
கண்காணிப்பாளர் வைத்தியநாதன், ஆசிரிய ர்கள் பிரேம்நாத், தாமரைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கணினியில் துறை விரிவுரையாளர் சத்யா நன்றி கூறினார்.