டேக்வாண்டோ பயிற்சியாளர்களுக்கு பாராட்டு
- அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது.
- சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெற செய்த மாஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்பார்க் அகாடெமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டி களில் இம்மாணவர்கள் 13 தங்க பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 17 வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடமும் தமிழ்நாடு மாணவர்கள் (நாகப்பட்டினம்) 2வது இடமும் கர்நாடகா மாநிலம் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளனர்.
குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்த மாஸ்டர் பாண்டியனுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.