கடைகளில் இனிப்பு, பலகாரங்கள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா?
- இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும்.
- உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
நாகப்பட்டினம்:
அடுத்த மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. தரமான பொருள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட த்தில், உணவு பாதுகாப்பு த்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்
புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மற்றும் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், தயாரிக்கப்பட்ட இனிப்பு கள், காரம், எண்ணெய், நெய், பாசிப்பரு ப்பு, கடலைப்பருப்பு, கடலை மாவு, போன்ற பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொ ருட்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உணவு விற்பனை நிலையங்களில் உணவு மாதிரிகளாக எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஒரு உணவு விற்பனை நிலையத்தை நியமன அலுவலர் புஷ்பராஜ், உணவு பாதுகா ப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, தயாரிப்பு விபரம் முறையாக இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்ப ட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கைப்ப ற்றப்பட்டு, முழுமையான விபரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் மீண்டும் நிறுவன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து நியமன அலுவலர் புஷ்பராஜ் அளித்த பேட்டியில்,
இனிப்பு , கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படு த்தக்கூடாது. உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை மேற்கொள்ளும் பகுதி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
அனைத்து உணவு விற்பனையாளர்களும் உரிமம் , பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ஐ மீறுபவர்கள்மீது கடுமையா ன நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது புட்சேப்டி ஆப் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்தாரர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.