உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

Published On 2023-01-30 09:24 GMT   |   Update On 2023-01-30 09:24 GMT
  • வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள் என கமிஷனர் கூறினார்.
  • தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மேயர் அறையில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல மணி நேரம் இருந்து கொண்டு கமிஷன் பேசுகிறார்கள். அதனால் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என புகார் கூறி பேசினார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே கமிஷனர் தலையிட்டு வளர்ச்சி பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள். பிற சம்பவங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச வேண்டாம் என அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் அஜய், கிட்டு, ஆகிய 2 பேரும் பேசும் போது, மேயர் அறையில் மக்களுக்கு தேவையான பணிகள் நடைபெறவில்லை என்பது உள்பட பல்வேறு புகார்களை கூறினார்.

மேலும் இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

வாக்குவாதம்

அப்போது 2 தரப்பு தி.மு.க. கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, பவுல்ராஜ், கோகுலவாணி சுரேஷ், முத்துலட்சுமி சண்முக பாண்டி, கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன், சந்திரசேகர், அனுராதா சங்கர பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News