உள்ளூர் செய்திகள்

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள்

Published On 2022-09-24 09:48 GMT   |   Update On 2022-09-24 09:48 GMT
  • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடியில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கின
  • அமைச்சர் சிவசங்கர் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் ெஜயங்கொண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பொதுப் பணித்துறை சார்பில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தலா ரூ.3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த பணிமனைகள் ஒவ்வொன்றின் தரைத்தளம் தலா 982.25 ச.மீ பரப்பளவு கொண்டது. இந்த தரைத்தளத்தில் நான்கு வகுப்பறைகள், பணிமனை அரங்கம், கூட்டரங்கம், பணியாளர் அறை, கணினி அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்படவுள்ளது என்றார்.

செந்துறை-சேலம் பேருந்து சேவை தொடக்கம்... செந்துறையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவசங்கர், செந்துறையில் இருந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்துக்கு பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அய்யூர் துணை மின்நிலையத்தில் இருந்து புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் தேவேந்திரன், அன்பரசி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News