உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் அரியலூர் மாணவர்கள் 1023 பங்கேற்பு

Published On 2022-12-28 06:34 GMT   |   Update On 2022-12-28 06:34 GMT
  • போட்டியில் அரியலூர் மாணவர்கள் 1023 பங்கேற்றனர்
  • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்

அரியலூர்:

அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டி நடைபெற்றது. அரியலுார் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை, தா.பழூர், திருமானுார் ஆகிய 6 வட்டாரங்களை சேர்ந்த 40 ஆயிரத்து 353 அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 6 முதல் 8ம் வகுப்பு, 9-10, 11-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் 20 ஆயிரத்து 42 மாணவர்களும், வட்டார அளவில் 4 ஆயிரத்து 991 மாணவர்களும், மாவட்ட அளவில் ஆயிரத்து 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறும்போது:- இதுபோன்ற கலைத்திருவிழாப் போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே உள்ள கலைத்திறனை வெளிப்படுத்தி அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது என்று அவர் கூறினார்.


Tags:    

Similar News