உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-26 06:47 GMT   |   Update On 2023-01-26 06:47 GMT
  • ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
  • 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரோஸ் அலெக்சாண்டர், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, வி.ஏ.ஓ. வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் செல்லகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது எனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு நோட்டு வாங்க மாட்டோம், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் முழக்கங்கள் செய்தவாரே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா நன்றி கூறினார்.

Tags:    

Similar News