உள்ளூர் செய்திகள் (District)

வானதிரையன்பட்டினம் முருகன்கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்

Published On 2023-04-05 07:06 GMT   |   Update On 2023-04-05 07:06 GMT
  • பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது
  • பால்,வேலை காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

ஜெயங்கொண்டம், 

ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வாணதிரய ன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த முருகன் கோவிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான இடையார், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம், பருக்கல், உடையார்பாளையம், சில கால், பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பலவகையான காவடிகள்எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக முருகன் வள்ளி தெய்வானைக்கு திரவியப்பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. காவடி திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்திடவும் வானதிராயன்பட்டிணம் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர். விழாவி ற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News